பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு..
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பைபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 451 புள்ளிகள் சரிந்து 78 ஆயிரத்து 248 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 168 புள்ளிகள் குறைந்து 23ஆயிரத்து645 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவுற்றது. அதானி என்டர்பிரைசஸ், HCL Tech, Tech Mahindra ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. Hindalco, Bharat Electronics, Trent, Tata Motors ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. மருந்துத்துறை பங்குகள் 1 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல், வங்கித்துறை, ஆற்றல், உள்கட்டமைப்பு, உலோகத்துறை பங்குகள் சரிவை கண்டன. சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒருகிராம் 7150 ரூபாய்க்கும் , ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனையானது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் கொள்ள வேண்டும்