பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளில் லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 33 புள்ளிகள் சரிந்து 84 ஆயிரத்து 266 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது. அதன் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 13 புள்ளிகள் சரிந்து 25 ஆயிரத்து796 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. Tech Mahindra, M&M, Britannia Industries, Adani Enterprises, Infosysஉள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன IndusInd Bank, ONGC, Asian Paints, Bajaj Auto,Titan Company உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. ஊடகம், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பத்துறையில் பங்குகள் முதலீடுகள் அதிகம் இருந்தன. டெலிகாம், ஆற்றல், எப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை மற்றும் ரியல் எஸ்டேட்துறைகளில் பங்குகள் விற்பனை அதிகம் இருந்தது. Akzo Nobel, Balrampur Chini, BASF, Bombay Burmah, Britannia Industries, Deepak Fertilisers, EID Parry, Fortis Healthcare, Hindalco Industries, ICICI Prudential, JM Financial, Lloyds Metals, Metropolis, NALCO, Polycab India, Shree Renuka Sugars, Tata Communications, V-Mart Retail உள்ளிட்ட 239 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. அக்டோபர் 1ஆம் தேதி செவ்வாய்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து 56ஆயிரத்து400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 50 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 101 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை 1லட்சத்து ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.