கள்ளச்சந்தையில் விற்பனை: ரூ.58,000 கோடி ரூபாய் இழப்பு !!!
கடந்த 2019-20ம் ஆண்டில் சட்டவிரோத பொருட்கள் விற்பனை குறித்த அறிக்கையை FICCI வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுக்கு வரியாக செல்லவேண்டிய 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், செல்போன்கள், புகையிலை மற்றும் சாராயம் உள்ளிட்ட பொருட்கள்தான் அதிகம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மொத்த வரி இழப்பில் 49% வரி இழப்பு புகையிலை மற்றும் மதுவிற்பனையில்தான் நடப்பதாக கூறப்பட்டுள்ளது
கள்ளச்சந்தையில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில் மட்டும் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்கப்பட்டுள்ளதாக FICCI அமைப்பு அறிக்கை கூறுகிறது.
மொத்தம் 7லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு இந்த கள்ளச்சந்தையால் வேலை போயுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அடைக்கப்பட்ட உணவுகளில் மட்டும் அதிகபட்சமாக 17 ஆயிரத்து 74 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது
2,589 கோடி ரூபாய் அளவுக்கு கள்ளச்சந்தையில் செல்போன்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் கள்ளச்சந்தையால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
இந்த கள்ளச்சந்தை விற்பனைகளை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. கள்ளச்சந்தையில் பொருட்களை விற்பதை தடுக்க அரசாங்கம், வணிகர்கள்,பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது