விழுந்து நொறுங்கிய சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் ஜனவரி 23 ஆம் தேதி, மிகப்பெரிய சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 53 புள்ளிகள் குறைந்து 70 ஆயிரத்து 370 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 333புள்ளிகள் வீழ்ந்து 21,238 புள்ளிகளாக முடிந்தது. உலகளவில் வலுவான பங்குச்சந்தைகளின் முடிவுகளால் துவக்கத்தில் உயர்ந்திருந்த சந்தைகள் பின்னர் வேகமாக சரியத் தொடங்கின.
சோனி மற்றும் ஜீ நிறுவன ஒப்பந்தம் ரத்தானது சந்தையில் பிரதிபலித்தது. தினத்தின் மிகப்பெரிய இழப்பு இண்டஸ் இண்ட் வங்கி,Coal India, ONGC, Adani Ports,SBI Life Insurance ஆகிய நிறுவனங்களில் காணப்பட்டது. Cipla, Sun Pharma, Bharti Airtel, ICICI Bank, Hero MotoCorp. ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. மருந்துத்துறையைத் தவிர மற்ற நிறுவனங்கள் சிவப்பில் முடிந்தன.
முதலீட்டாளர்கள் பணம் 8லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஜனவரி 23 ஆம் தேதி மட்டும் இந்திய பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு 374.40 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து முடிந்தது. ALLSEC Technologies, Aurobindo Pharma, Avantel, Borosil Renewables, Caplin Labs, Cipla, Gandhi Special Tubes, Global Health, IDBI Bank, Indian Bank, Indian Hotels, Lupin, Max Healthcare, PB Fintech, Persistent Systems, Petronet LNG, Salasar Technogies, Sterling Wilson, Sun Pharma, Torrent Pharma, Vikas Life, Visaka Industries, Waaree Renewable, Zydus Life உள்ளிட்ட 450க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்ச விலையை தொட்டிருந்தன.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை 5830 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 76 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் விலை குறைந்து 76 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் செய்கூலி, சேதாரம் மற்றும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி கண்டிப்பாக சேர்க்கவேண்டும். இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன், செய்கூலி,சேதாரத்தையும் சேர்த்தால்தான் எவ்வளவு பணம் கையில் இருந்து செலுத்தவேண்டும் என்ற விவரம் வெளியாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.