22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வங்கதேசத்தால் திருப்பூருக்கு லக்..

வங்கதேசத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி எழுந்து, சில சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்த பின்னலாடை தொழில் திருப்பூருக்கு திரும்பியுள்ளது. நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் 55%பங்களிப்பை செய்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆர்டர்கள் பெருமளவு தற்போது திருப்பூரில் குவிகின்றன. 40ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதியை திருப்பூரால் கையாள இயலும். 2022-23 காலகட்டத்தில் 34,350 கோடி ரூபாய் வரை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி இருந்தது. 2023-24 காலகட்டத்தில் இது 30,690 கோடியாக சரிந்தது. ஏப்ரல்-ஆக்ஸ்ட் 2024 வரை மட்டும் 14,579 கோடிரூபாய் அளவுக்கு பின்னலாடையை திருப்பூர் ஏற்றுமதிசெய்திருக்கிறது. வால்மார்ட், GAP, மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள்அதிகளவில் திருப்பூருக்கு ஆர்டர்களை அளிக்கின்றன. கடந்தாண்டைவிட இந்தாண்டு அக்டோபரில் ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி 35%அதிகரித்துள்ளது. ஆடை ஏற்றுமதிக்கு வங்கதேசம், கம்போடியா, வியாட்நாம் உள்ளிட்ட நாடுகள் தனியாக ஊக்கம் தருவதைப் போல உள்கட்டமைப்பை திருப்பூருக்கும் அரசு செய்துதர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *