மீண்டும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை..
இஸ்ரேல்-ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலையும் மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 2.6 %உயர்ந்து 73.54அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஓபெக் அமைப்பினர் இணைந்து அடுத்தகட்ட விலையேற்றம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். வரும் டிசம்பரில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 1.8லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க லிபியாவில் இருந்தும் அதிக கச்சா எண்ணெய் சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன. சீனாவில் உற்பத்தித்துறை பெரிய சரிவை சந்தித்துள்ள நிலையில் எண்ணெயின் தேவையும் குறைந்திருக்கிறது. சீனாவில் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக கூடுதல் நிதியை அந்நாட்டு மத்திய வங்கி அளித்துள்ளது. இதனால் அங்கு பொருளாதார நடவடிக்கைகள் உயர்ந்து கச்சா எண்ணெய் தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் -ஈரான் இடையேயான போர் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு இந்த இருநாடுகள் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.