ஆட்டம் போட்ட கச்சா எண்ணெய் விலை சரிகிறது….
ஒவ்வொரு முறை கொரோனா குறித்த தகவல் வெளியாகும்போதும், கச்சா எண்ணெய் விலையும் ஆட்டம் கான்பது
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இதே பாணயில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம்
நடக்கிறது. அதன்படி,சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது
இதனை கட்டுப்படுத்த ஜீரோ கோவிட் என்ற கட்டுப்பாட்டை பல மாகாணங்களுக்கும் பரவலாக சீன அரசு அறிவித்துள்ளது
இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் சீனாவிற்கு எரிபொருளும் பெரிய அளவுக்கு தேவைப்படவில்லை. இதன் தாக்கம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு காரணமாக உள்ளது. உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 2-வது பெரிய நாடாக சீனா உள்ளது. சீனாவுக்கு அதிக எரிபொருள் தேவைப்படாத பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை 0.66% விலை குறைந்துள்ளது.
அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிவிப்பு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்திருந்ததால்
கச்சா எண்ணெய் விலையும் சரியத் தொடங்கியுள்ளது. சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் தற்போது 96.32 டாலராக உள்ளது. இது மேலும் சரிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.