கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை…
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 30 % குறைந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 124 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 86டாலர்களாக குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உச்சகட்டத்தில் இருந்தபோது மிகுந்த நஷ்டத்தில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு பெட்ரோலிய பொருட்களை அளித்து வந்தன. இந்த சூழலில் தற்போது பெட்ரோலிய பொருட்கள் விலை கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் சந்தித்த இழப்புகளை தற்போது கிடைக்கும் கூடுதல் வருவாயை வைத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சரிசெய்து வருகின்றன.
இன்னும் சில காலம் லாபத்தை சுத்திகரிப்பு ஆலைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்து உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாயிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது
எண்ணெய் விலை சர்வதேச அளவில் சரிந்தாலும் சந்தை நிலையற்று இருப்பதால் அவசரப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை அரசு நிறுத்த விரும்பவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசுக்கும் செலவை குறைத்துள்ளது சற்று ஆறுதல் அளித்துள்ளது . ஆனாலும் சாதாரண பொதுமக்கள் செலுத்தும் பணம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது