வெளிநாட்டு பண கையிருப்பு சரிவு..
இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு தொடர்ந்து 8 ஆவது வாரமாக சரிந்து வருகிறது. 1.31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து, நவம்பர் 22 ஆம் தேதி நிலவரப்படி 656.582 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த சில வாரங்களாக 17.76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்து வந்த வெளிநாட்டு பண கையிருப்பால், மிகப்பெரிய தாக்கம் இந்திய ரூபாயின் மீது ஏற்பட்டது. இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பண கையிருப்பில் இருந்து தற்போது 3.043 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு தற்போது 566.791 பில்லியன் டாலர்களாக இறுப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை 84ரூபாய் 50 காசுகளாக மோசமான உச்சம் தொட்டது. கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவிடம் வெளிநாட்டு பண கையிருப்பு இதுவரை இல்லாத உச்சமாக 704 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் கடந்த 22 ஆம் தேதி நிலவரப்படி 657பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. வெளிநாட்டு பணம் கையிருப்பு குறைந்துள்ளபோதும், தங்கக்தின் கையிருப்பு நம்பிக்கை அளித்துள்ளது. கடந்த வாரத்தில் இந்தியாவின் தங்க கையிருப்பு மதிப்பு 67.573 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. சர்வதேச நாணைய நிதியத்தின் பட்டியலில் இந்தியாவின் மதிப்பு 15 மில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 4.232 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.