இந்திய சந்தைகளில் சரிவு..
அக்டோபர் 16ஆம் தேதியான புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் சரிந்து 81,501 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86 புள்ளிகள் குறைந்து வணிகத்தை 24, 971 புள்ளிகளில் முடித்தன. தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் பங்குகள் சரிந்ததால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி காணப்பட்டது. 1935 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1846 நிறுவன பங்குகள் சரிந்தும் வர்த்தகம் முடிந்தது HDFC Life, Dr Reddy’s Labs, Grasim, HDFC Bank, Bajaj Auto ஆகிய நிறுவனங்கள் விலை உயர்ந்து முடிந்தன. Infosys, Coforge, TCS ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. ஆபரணத்தங்கம் விலை அக்டோபர் 16ஆம் தேதி புதன்கிழமை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சமாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து140 ரூபாயாகவும், ஒரு சவரன் 57 ஆயிரத்து 120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி 103 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது.
இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.