சீன பங்குச்சந்தைகளின் மதிப்பு குறைப்பு..
சீன பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் சீன நிறுவனங்களின் மதிப்பை பிரபல அமெரிக்க நிறுவனங்கள் தரம் குறைத்துள்ளன. கோல்ட்மேன் சாச்ஸ், மார்கன் ஸ்டான்லி ஆகிய நிறுவனங்கள் அண்மையில் பங்குச்சந்தைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டன. அதில் ஹாங்காங்கைச் சேர்ந்த பங்குகள் மார்கெட் வெயிட் நிலையில் இருந்து அன்டர்வெயிட் என்ற நிலைக்கு தரம் குறைக்கப்பட்டது. சீன நிறுவனங்களின் பங்குகளை மார்கன் ஸ்டான்லி நிறுவனம் சமமான வெயிட்டில் இருந்து அண்டர் வெயிட் என்ற பிரிவாக குறைத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெள்ளை மாளிகையை கைப்பற்றியதால் சீனாவின் மீது வர்த்தக தடைகள் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன. இதன் விளைவாகவே சீன பங்குச்சந்தைகள் சரிவை கண்டுள்ளன. சீனாவின் சிஎஸ்ஐ300 பங்குச்சந்தைகள் 2025 இறுதிக்குள் 4000 புள்ளிகளை குறையும் என்றும். ஹாங்க்செங் 19,400 மற்றும் திங்களன்று 19ஆயிரத்து 655 என்ற நிலையில் இருந்தன. மெயின்லாண்டு பங்குகள் குறித்து கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பங்குகள் பெரியளவில் வளரவில்லை என்றும், ஹாங்காங்கின் வளர்ச்சியும் அந்தளவு இல்லை என்றும் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன பண மதிப்பான யுவான் மேலும் வீழும் என்று அமெரிக்கா கணித்துள்ளது. மெயின்லாண்டைச் சேர்ந்த சந்தை குறைந்த அளவே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பணவீக்கம் ஏற்ற இறக்கத்தை இந்த சந்தைகள் மாற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.