22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தசை சிதைவு நோய்க்கான மருந்து மலிவாகிறது..

தண்டுவட தசை சிதைவு நோய் என்பது எஸ்எம்ஏ என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்க்கான சிகிச்சைக்கு தற்போது 22 லட்சம் முதல் 72 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த நிலையில் நாட்கோ நிறுவனம் இந்த நோய்க்கான மருந்து தயாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் பச்சை கொடி காட்டியுள்ளது. ரிஸ்டிப்லாம் என்ற மருந்தை இந்தியாவிலேயே தயாரிக்க நாட்கோ நிறுவனம் அனுமதி கோரியிருந்த நிலையில் அதில் சட்ட சிக்கல்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் அந்த சிக்கலை தீர்த்து வைத்துள்ளது. இதனால் குறிப்பிட்ட மருந்து வெறும் 3 ஆயிரம் ரூபாயிலேயே தயாரிக்க முடியும். சரியான தருணத்தில் இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக நீதிபதி மினி புஷ்கர்னா கருத்து தெரிவித்தார். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்திடம் மட்டுமே இந்த நோய்க்கான மருந்து இருந்து வந்தது. இந்திய காப்புரிமை தங்கள் வசம் இருப்பதாக ஸ்விஸ் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அரிதான நோய் என்பதால் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்விஸ் நிறுவனம் கூறியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு புதுவாழ்வு அளிப்பதாக உள்ளதாக நோயாளிகள் கருத்து தெரிவிக்கின்றனர். நீதிமன்ற தீர்ப்பால் தேவையற்ற எஸ்எம்ஏ சார்ந்த மரணங்களை தடுக்க முடியும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *