டெட்டாலின் புதிய அவதாரம்..

அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம்பிடித்து இருக்கும் பொருட்கள் பட்டியலில் டெட்டாலும் ஒன்று. அதுவும் கொரோனா சமயத்தில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது.
சந்தையில் தற்போது காத்ரேஜ் நிறுவன பொருட்கள் மற்றும் டெட்டால் ஆகியவற்றுக்கு தான் நேரடி போட்டி உள்ளது.
இந்த சூழலில் பவுடர் to liquid வகை handwash சந்தையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள் டெட்டால் நிறுவனம். இது தொடர்பாக டெட்டால் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , 10 ரூபாய் முதல் கிடைக்கும் வகையில் இந்த பொருள் தயார் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதற்கான விளம்பரங்களும் தொலைக்காட்சிகளில் வெளியாக உள்ளன. கைகளின் சுத்தம் குறித்து விழிப்பு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் இருக்குமென கூறப்பட்டு உள்ளது.