டிஜிட்டல் சந்தை சட்டத்தில் முதலில் சிக்கும் நிறுவனங்கள்…
டிஜிட்டல் சந்தை சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்கீழ் ஆப்பிள், கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் விசாரணைக்கு வர இருக்கிறது. விதிமீறல்கள் உறுதியானால் இந்தநிறுவனங்களுக்கு பெரிய அபராதம் விதிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலாகியுள்ளது. தேடுபொறி, சமூக வலைதளங்கள் மற்றும் சாட்டிங் செய்யும் செயலிகள் இந்த சட்டத்துக்கு உட்படும், போட்டி நிறுவனங்களுக்கு வாய்ப்பு தராவிட்டால் அதற்கும் அபராதம் விதிக்கப்படும். அபராதமாக அந்நிறுவனங்களின் உலகளாவிய டர்ன் ஓவரில் 10 விழுக்காடு வரை கூட விதிக்கும் வகையில் இந்த சட்டம் வகை செய்கிறது. சபாரி, மெட்டாவின் பே மற்றும் கன்சன்ட் மாடல் ஆகியவை இந்த சட்டத்திற்கு உட்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் விளம்பரமே இல்லாத சேவையை மெட்டா அறிமுகப்படுத்தியது பேசு பொருளாகியுள்ளது. விதிகளை சரியாக பின்பற்றியே மெட்டா நிறுவனம் செயல்படுவதாகவும் கூறியுள்ளது.
பிரபல நிறுவனங்கள் ஐரோப்பிய டிஜிட்டல் சந்தை சட்டத்தை முறையாக பின்பற்றுகிறதா இல்லை வசமாக சிக்கப்போகிறதா என்பதை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்