கலக்கமடைய வைக்கும் மந்தநிலை:சிறப்பு கட்டுரை
உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு,ஏற்றுமதி ஆகியன அதிகரித்துள்ளன.
இது இத்துடன் முடியப்போவதும் இல்லை.மோசமான நிலை இதற்கு பிறகுதான் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி. கடந்த மாதம் மட்டும் 3.5% குறைந்துள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மட்டும் 17% சரிந்துள்ளது.
நடப்புக்கணக்கு பற்றாக்குறை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது
தொழிற்சாலை உற்பத்தி அளவு கடந்த ஜூலை மாதம் 2.4%குறைந்த நிலையில்,கோர் எனப்படும் முக்கியமான துறைகளின் வளர்ச்சி சரியும் விகிதம் ஆகஸ்ட்டில் 3.3%ஆக உள்ளது.இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு குறைவாகும்.
ஜிஎஸ்டி வரிவசூல் அளவிலேயே மந்த நிலையின் தாக்கத்தை தெளிவாக காண முடிகிறது. கடந்த ஏப்ரலில் 1.68 டிரில்லியன் ரூபாயாக இருந்த ஜிஎஸ்டி வரிவசூல் தற்போது 1.45 டிரில்லியனாக சரிந்துள்ளது.
இவை அணைத்துக்கும் சர்வதேச காரணிகளும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உலகளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை,உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவை பிரதான புற காரணிகளாக உள்ளன. முழு நிதியாண்டிலும் இந்தியாவின் வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அதை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் உலக வங்கியும் இந்தியாவின் வளர்ச்சி 6.5% ஆக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
கருவூல பத்திரங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று ரசிர்வ் வங்கி கணித்துள்ள நிலையில் இந்தியாவின் வளர்ச்சி கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது எனவும் கூறலாம். கணிப்புகள் எப்படி இருந்தாலும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் வளரச்சி 4% ஆக சரிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழல் கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையாகவே பார்க்கப்படுகிறது.