விற்பனைக்கு கை கொடுத்த பண்டிகை..
இது என்னடா கார் விற்கவே முடியல என்று புலம்பிய கார் விற்பனையாளர்களுக்கு பண்டிகை கைகொடுத்துள்ளது. பிரீமியம் ரக கார்களைத்தான் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக ஹாட்ச்பேக் ரக கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மாருதி சுசுகி பலேனோ, ஹியூண்டாயின் கிரெட்டா, பிரெசா, மஹிந்திராவின் தார் ராக்ஸ் மற்றும் எம்ஜியின் வின்ட்சர் மின்சார கார்கள் தான் மக்களின் அபிமான கார்களாக விற்பனையில் கலக்கியுள்ளன. கடந்தாண்டு அக்டோபரில் விற்காமல் கிடந்த 3.9லட்சம் கார்கள் தற்போது பெரிய அளவில் விற்கப்பட்டுள்ளதாகவும் சியாம் அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நவம்பரில் திருமண சீசன் அதிகம் என்பதால் விற்பனை ஜோராக நடக்கும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த செயல் தலைவர் பார்தோ பானர்ஜி கூறும்போது,இதுவரை இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் 22.4 விழுக்காடு கடந்த அக்டோபரில் விற்பனை நடந்தது என்றார். தற்போது வரை மாருதி சுசுகி நிறுவன கார்களை ஆர்டர் செய்தால் 30 நாட்களில் டெலிவரி செய்யும் வகையில் திட்டம் உள்ளது. இதேபோல் ஹியூண்டாய் நிறுவனத்தின் விற்பனையும் 0.8விழுக்காடு கடந்தமாதம் அதிகரித்துள்ளது. எஸ்யுவி ரக கார்களைத்தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதாக அந்நிறுவன அதிகாரி தருன் கர்க் கூறியுள்ளார். 37,902 கார்களை ஹியூண்டாய் நிறுவனம் விற்றுள்ளது. அதிலும் குறிப்பாக ஹியுண்டாய் கிரெட்டா ரக கார்கள்தான் 17ஆயிரத்து497 கார்கள் விற்றுள்ளன.மொத்த விற்பனையில் 68.2விழுக்காடு அளவுக்கு எஸ்யுவி கார்கள் விற்பனை நடந்துள்ளது. மகிந்திரா நிறுவன கார்கள் 25 விழுக்காடும், டொயோடா கார்கள் 37 விழுக்காடும், எம்ஜி மோட்டார் நிறுவனம் 31 விழுக்காடும் உயர்ந்துள்ளன. கார்களைப்போலவே 2சக்கரவாகனங்களும் அதிகம் விற்றுள்ளன. கடந்த அக்டோபரில் 17.4 விழுக்காடு உயர்ந்த ஹீரோ நிறுவன விற்பனையால் மொத்தம் 6.57லட்சம் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. 100 சிசி மற்றும் 125 சிசி பைக்குகள்தான் அதிகம் விற்றுள்ளன. அதிலும் ஹீரோ நிறுவனம்தான் அதிகம் பைக்குகளை விற்றுள்ளது.