ஐபோனை தயாரித்தவர் என்ன போன் வச்சிருக்காரு தெரியுமா!!!!
டோனி ஃபேடல் என்பவர் ஐபோனின் இணை நிறுவனராக உள்ளார். அவர் அண்மையில் யுவர் ஸ்டோரி என்ற
செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரே ஐபோன் 12 தான் வைத்துள்ளதாக கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிறகு டோனி நெஸ்ட் லேப்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புதிதாக செல்போன்களை வாங்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்த கூடாது என்றும் சுழற்சி பொருளாதாரத்தை அடிப்படையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பொருளை உற்பத்தி செய்வது புதிய பாடலை உருவாக்குவது போன்றது என்றார். பலதுறைகளை உள்ளடக்கியதாகத்தான் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றார். ஐபாட் உபகரணத்தை உருவாக்கியதே டோனிதான் என்பது கூடுதல் தகவலாகும். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ஐபோன்கள் வந்துகொண்டே இருக்கிறது அதையும் மக்கள் வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள் அது தேவையில்லாதது என்று கூறியுள்ளார். ஐபோன்களை தற்போது கிட்டத்தட்ட
பெரும்பாலானோர் வாங்கத்தொடங்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.