வேலையைவிட்டு தூக்குறதுலாம் அமெரிக்கா ஸ்டைல்.., நாங்க புதுசா வேலைக்கு எடுப்போம் சொல்வது யார் தெரியுமா??
உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டியும், வியாபாரத்தில் உள்ள தொய்வை காட்டியும் உலகின் முன்னணி பெருநிறுவனங்கள் ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களை நீக்கி வருகின்றனர். இந்த நிலையில் டாடாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனம் உலகம் முழுவதும் 800 பேரை புதிதாக பணியில் அமர்த்த உள்ளது. பிரிட்டன்,அயர்லாந்து,இந்தியா,சீனா மற்றும் ஹங்கேரியில் இந்த பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் டிரிவன் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களை அலேக்காக தங்கள் நிறுவனத்துக்கு தூக்க டாடா நிறுவனம் காத்திருக்கிறது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் பணியில் சேர உள்ள பணியாளர்களுக்கு ஹைப்ரிட் வகையிலான பணி சூழலை டாடா நிறுவனம் ஏற்படுத்தி தர உள்ளது, மெட்டா, டிவிட்டர், ஸ்னாப், மைக்ரோசாப்ட்,ஆகிய நிறுவனங்களில் நடக்கும் அதிகப்படியான ஆட்குறைப்பில் திறமையான நபர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் ஜாக்கவார் நிறுவனம் தனது ஓப்பனிங்க்ஸை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ்,மெஷின் லர்னிங் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொட்டிக்கிடப்பதாக பல நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த துறையில் உள்ளவர்களைத்தான் ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தேடி வருகிறது மின்னணு வாகனங்கள்,கரியமில வாயு வெளியேற்றாத வாகனங்களை மையப்படுத்தி இவர்களுக்கு பணி அளிக்கப்பட உள்ளது.