டாலர் கெட் அவுட்: வெயிட் காட்டும் ரஷ்யா
உலகின் பல நாடுகளும் அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே வர்த்தகம் செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ரஷ்யா ஆளாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாய் மற்றும் ரஷ்ய பணத்தில் வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய திட்டத்தை ரஷ்யா அறிவிக்க உள்ளது.
ஏற்கனவே இந்திய ரூபாய்க்கு நிகராக ஈரானிய பணத்தில் இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது. இதற்கான பணிகளை பாரத ஸ்டேட் வங்கி செய்தது. இந்நிலையில் இதே பாணியிலான திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இந்தியா-ரஷ்யா அதிகாரிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி வெகுவாக குறைந்துவிட்டது. இந்த சூழலில் அதனை மீண்டும் சரி செய்யும் வகையில் பணிகளை இருநாட்டு அரசுகளும் செய்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் வர்த்தகம் நடக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பதுடன் சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிகள் செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது