ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கூடுதல் வரி?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை டொனால்ட் டிரம்ப் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 % கூடுதல் வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க கார்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 4 மடங்கு வரி விதிப்பதால் இந்த நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் எடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பு கூட்டு வரியாக அதிகபட்சமாக 17.5% வரி விதிப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் அதிபரிடம் புகார் தெரிவித்தனர்.இதனால் கடுப்பான டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 % வரி விதிக்கப்போவதாகவும், இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு இடையே வரி விதிப்போம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்திருந்ததுடன், இந்தியாவில் நிறைய பணம் இருப்பதாகவும் பேசியிருந்தார். இந்த சூழலில் புதுவரவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25% வரி விதிக்க டிரம்ப் எடுத்துள்ள முடிவு அமெரிக்க மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.