வட்டி குறைப்பா யோசிக்கவே இல்லங்க…
இந்தியாவில் பணவீக்கம் 4 விழுக்காடு இலக்கை எட்டும் வரையில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுக்கவில்லை என்று ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
புளூம்பர்க் தொலைக்காட்சியின் ஹஸ்லிண்டா அமின் என்பவருக்கு சக்தி காந்ததாஸ் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் உலக பொருளாதார நிலை குறித்து டாவோசில் விளக்கப்பட்டது.
கடந்த 5 நிதி கொள்கை கூட்டங்களில், இந்திய ரிசர்வ் வங்கியில் கடன்கள் மீதான வட்டி விகிதம் மாறுபடவே இல்லை.அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் ஈடுபட்டுள்ள நிலையில் அதே மாதிரியான திட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை என்று சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சந்தை காரணிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் திட்டங்கள் முக்கிய பங்கு வகித்தன.அரசு பத்திரங்கள் 10 ஆண்டுகளாக 1 அடிப்படை புள்ளி உயர்ந்து 7.19%ஆக உயர்ந்தது.
டிசம்பரில் 4 மாதங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது. உணவுப்பொருட்கள் விலையேற்றத்தால் பணவீக்கம் உயர்ந்திருக்கிறது.விலைவாசி உயர்வு 4 விழுக்காடுக்கும் குறைவாக வரும்போது கடன்களின் வட்டி மீது சலுகைகள் அளிக்கலாம் என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார்.
வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக உயர வாய்ப்புள்ளது என்று சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியாவின் வளர்ச்சி 6.5 விழுக்காடு வரை இருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்த நிலையில் அது தற்போது 7 விழுக்காடாக உள்ளது என்றும் தாஸ் பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய பணத்தின் மதிப்பை ரிசர்வ் வங்கி அதிகம் மதிப்பிடுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதை குறிப்பிட்ட சக்தி காந்ததாஸ் பேசியுள்ளார்.
இந்திய ரூபாய் திடீரென வலுபெற்றால் அதற்காக ரிசர்வ் வங்கியை குற்றம் சொல்ல கூடாது என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் வந்துகொண்டே இருக்கும் என்றும், இது ஓரிரு இரவுகளில் நடக்கவில்லை என்றும் சக்திகாந்ததாஸ் விளக்கமளித்துள்ளார்.