இந்தியாவுக்கு உள்ள பொருளாதார சவால்கள்…
இந்தியாவின் தனிநபர் வருவாயை விட வங்கதேசத்தின் வருவாய் அதிகரித்தது, அதேபோல் பிரிட்டனின் பொருளாதாரத்தை இந்தியா மிஞ்சியது. மேலும் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது.
இந்தியாவை விட வங்கதேசம் ஏழை நாடாக இருந்தாலும் அங்கு அவர்களின் தனிநபர் வருவாய் உயர்ந்துள்ளது.
பொருளாதாரத்தில் இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் ஜி20 நாடுகளில் ஒன்றாக உள்ளது.
ஆனால் ஜி20 நாடுகளில் இந்தியர்கள்தான் ஏழைகளாவர்.
இந்தோனேசியா, பிரிட்டன் நாடுகளை விட இந்தியர்கள் குறைவாகத்தான் பொருட்களை வாங்குகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் GDSP ஆயிரம் டாலர்களுக்கும் குறைவாகும், தமிழகத்தில் இந்த குறியீடு 3 ஆயிரம் டாலர்களாக உள்ளது.
கிரிடிட் டெபாசிட் விகிதம் தமிழகத்தில் 1.19, ஆனால் உத்தரபிரதேசத்தில் 0.48 ஆக உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 29% மக்கள் ஏழைகள் என்று வகைபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 4%பேர் மட்டுமே ஏழைகளாக உள்ளனர்.
மனிதவள வளர்ச்சியில் தமிழகம் மிக அதிக அளவாக உள்ளது இந்த அளவு 0.71 ஆக உள்ளது. இந்த அளவு தென்னாப்ரிக்கா,எகிப்து ஆகிய நாடுகளுக்கு இணையாக உள்ளது.
ஆனால் உத்தரபிரதேசம் 0.59 %, இந்த அளவு நேபாளத்தை விட குறைவு.