சீனாவை மிரட்டும் பொருளாதார மந்த நிலை..
உலகமே அமெரிக்க பொருளாதாரத்தை உற்று நோக்கி வரும் இந்த சூழலில் சீனாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. சீனாவில் வேலையில்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளில் பெரிய தொய்வு காணப்படுகிறது. சீனாவின் இந்த பாதிப்பால் ஒட்டுமொத்த உலகிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் வீடுகளின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கணிசமாக குறைந்து வருகின்றன. சீனாவில் பொருளாதார நிலை மோசமடைந்து வரும் நிலையில் ஆக்கபூர்வமான திட்டங்களை வகுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. சீனாவில் ஆகஸ்ட் மாத பொருளாதார புள்ளிவிவரங்களை ஆராயும்போது,அந்நாட்டு வளர்ச்சி 2024-ல் 5 %ஆக இருந்தது. அமெரிக்காவில் எந்த அளவுக்கு மந்தநிலை இருக்கிறதோ அதே அளவுக்கு சீனாவிலும் பாதிப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பல நாடுகளில் சீன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை படிப்படியாக குறைத்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன