ரியல்எஸ்டேட்டால் கல்வி எட்டாக் கனியாகிறதாம்
பள்ளிகளில் கல்விக்கட்டணம் மிக மிக அதிகளவில் உயர்ந்துள்ளது குறித்து சோஹோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு சரமாரி புகார்களை முன்வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையின் அபார வளர்ச்சியே இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இதன் காரணமாக வீடுகளின் விலை, சுகாதாரத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவிரல் பாட்நகர் என்பவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்தார். அதில் ஐதராபாத்தில் எல்கேஜிக்கு கல்விக்கட்டணம் 3.7லட்சம் ரூபாயாக இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, அரசியலில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் துறையில் ஏராளமான கருப்புப்பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், வழக்கமான சந்தை மதிப்பை விட அதிகளவு பணத்துக்கு நிலங்களை விற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விலை அதிகமான வீடுகள்,பள்ளிக்கட்டணம் மற்றும் உடல்நலம் சார்ந்து அதிகம் செலவு செய்து அரசியல் ஊழலுக்கு பணம் செலவு செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சோஹோ அமைப்பு பள்ளிக் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதாகவும், சோஹா நடத்தும் அனைத்து பள்ளிகளும் இலவசம் என்றும், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களில் மட்டுமே நடத்த முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மிகவும் பெரிய பரிமாற்றத்தை சந்தித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளிலும் கல்வி கட்டண விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த நபர் தனது மகனின் பிளேஸ்கூலில் எல்கேஜிக்கு 4.3 லட்சம் ரூபாயைகட்டணமாக செலுத்தியதாக பரவிய தகவல் அதிர வைத்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்ந்து கல்விக்கட்டணத்தை உயர்த்திக்கொண்டே சென்றால் தங்கள் மகன் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய சூழல் வரும் என்றும் ஒரு நபர் குற்றம்சாட்டியுள்ளார்.,