22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

எலான் மஸ்க் வாங்கிய புதிய, ஆடம்பரப் பொருள்…

பெருந்தொகை கொடுத்து சமூக வலைதள நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் ஊர் உலகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய எலான் மஸ்க் தற்போது மீண்டும் ஒரு தலைப்புச் செய்திக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், மிக மிக மிக சொகுசான விமானம் ஒன்றை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார். இதன் விலை மட்டும் அமெரிக்க டாலரில் 78 கோடி டாலராகும். gulfstream G700 வகையைச் சேர்ந்த இந்த விமானம் அடுத்தாண்டு மஸ்க் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சொகுசாக இந்த ஜெட் விமானம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் 19 இருக்கைகள் இருக்கும்.51 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன்பெற்றது. இந்திய மதிப்பில் இந்த விமானத்தின் விலை 644 கோடி ரூபாயாகும். இந்த விமானத்தில் 2 சக்தி வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன இஞ்சின்கள் இரு்க்கும்.,ஒரு முறை எரிபொருள் நிறப்பினால் 7 ஆயிரத்து 500 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு இந்த விமானம் பயணிக்கும் திறன்பெற்றதாகும் அவரிடம் ஏற்கனவே G650 ERஎன்ற சொகுசு ஜெட் விமானம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *