முடிவே இல்லாத தொல்லை ..
ஒரு நாளில் சராசரியாக 7-8 லோன் தேவையா என்ற கால்கள் எப்போது முடியும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த தொல்லைகள் எப்போது முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். நீங்கள் எங்கேயும் உங்கள் விவரங்களை பகிராமலேயே இருக்கும்போது, எப்படி இவர்களுக்கு உங்கள் விவரங்கள் கிடைக்கின்றன. எப்போதாவது இதை யோசித்து பார்த்தது உண்டா??,இவை அனைத்தும் வங்கி பக்கம் கசிந்து இருக்கலாம், அப்படி கசியும் விவரங்களை வைத்து, ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி வார இறுதி நாட்களில் தொலைபேசி அழைப்புகள் செய்யப்படுவருகின்றன. இவற்றால் சில நேரங்களில் தற்கொலை செய்யும் அளவுக்கு மிரட்டல்கள் வருவது உண்டு, முறைப்படுத்த படாத வங்கி அல்லாத நிறுவனங்கள் இது போன்ற செயல்களை செய்கின்றன. இந்த பிரச்னைகளை சரி செய்ய கடந்தாண்டு, தரவு பாதுகாப்பு சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது இன்னும் பெயர் அளவில் மட்டுமே உள்ளன. அந்த புதிய சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்து.., எப்போது போன் கால்கள் வருவது நிற்கும் என்பது தான் பெரிய கேள்வி . அடுத்த முறை உங்களுக்கு லோன் தேவையா என்று கால் வந்தால், நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா??என் நம்பர் எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று கேளுங்கள். முறையான தகவல் இல்லை என்றால் அந்த செல்போன் அழைப்பை துண்டிப்பதே சிறந்தது. இருங்க, எனக்கு ஒரு கால் வருகிறது.,ஹலோ லோன் தற்றீங்களா..வேண்டாங்க தேங்க்ஸ்…