EPFOஅப்டேட் இது..

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFOடெபாசிட் நிதியின் வட்டி விகிதத்தினை 8.25 விழுக்காடாகவே தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் 7 கோடி தொழிலாளர்கள் பலன் அடைய இருக்கின்றனர். வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அரசு குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மேலும் 2024-25 காலகட்டத்தில் மட்டும் 2.05லட்சம் கோடி ரூபாய்க்கான கிளைம்களை செயல்படுத்தி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டான 2023-24 காலகட்டத்தை விடவும் அதிகமாகும், 2023-24 காலகட்டத்தில் 1.82லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கிளைம் செட்டில் செய்யப்பட்டது. கடந்தாண்டில் மட்டும் வட்டியாக 1.07லட்சம் கோடி ரூபாயை அந்த அமைப்பு அளித்துள்ளது. மொத்த மூலதன அளவு 13லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.15விழுக்காடாக இருந்தது. அந்நேரத்தில் 91 ஆயிரத்து 151 கோடி ரூபாய் வருவாயுடன் மொத்த முதல் 11.02லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து சிபிடி எனப்படும் குழுதான் இறுதி முடிவெடுக்கும், அந்த குழுவில் ஊழியர்களின் பிரதிநிதிகள், மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் EPFO நிறுவன அதிகாரிகள் இடம்பிடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.