மின்சார ஸ்கூட்டருக்கு இனி அபராதம்?!
தீ விபத்துகளை ஏற்படுத்திய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு மின்சார வாகன (EV) தயாரிப்பாளர்கள் பதிலளித்ததை அடுத்து இந்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
தீ விபத்துகளைப் பற்றி விசாரிப்பதற்கும், பேட்டரி சோதனை அளவுகோல்களைப் பற்றி பரிந்துரைப்பதற்கும் அரசாங்கம் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. இந்த இரு குழுக்களும் தற்போது தங்கள் பணிகளை முடித்துவிட்டன.
அரசு ஆய்வுகளை தொடர்ந்து ஒகினாவா 3,215 யூனிட்களையும், பியூர் EV 2,000 யூனிட்களையும், ஓலா எலக்ட்ரிக் 1,441 யூனிட்களையும் திரும்பப் பெற்றதாக நாடாளுமன்றத்தில் கனரக தொழில்துறை அமைச்சகம் வழங்கிய தரவு காட்டுகிறது.