தீபாவளி முதல் சென்னையில் 5ஜி சேவை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45ம் ஆண்டு பொதுக்கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் ஆண்டு தீபாவளிக்கு சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் 5க் பிராட்பேண்ட் சேவை நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார்.
2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். இதற்காக 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அனைவரும் 5ஜி சேவை வழங்கும் பொருட்டு, குவால்காம், எரிக்சன், நோக்கியா, சாம்சங், சிஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். ரிலையன்ஸ் ரீட்டைல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை, முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி கவனித்து வருவதாகவும், ஜியோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஆகாஷ் அம்பானி கவனித்து வருவதாகவும் கூறிய முகேஷ் அம்பானி, ஆனந்த அம்பானி, மாசில்லா எரிபொருளை இலக்காக கொண்டு செயல்படும், new energy business தொழிலில் முனைப்பாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். new energy business தொழிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களுக்காக, 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.