தோல்வி வீரனுக்கு மட்டுமல்ல..வியாபாரத்திலும் சகஜம்..யார் சொல்கிறார் பாருங்கள்…
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நிறுவனமாக உள்ளது வேதாந்தா குழுமம், அந்நிறுவனத்தின் தலைவரான
அனில் அகர்வால் அண்மையில் டிவிட்டரில் தனது வாழ்க்கை அனுபவத்தை பதிவிட்டுள்ளார் அதில் வியாபாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில், தோல்வி குறித்து எல்லாருக்கும் ஒருவித அச்சம் இருந்திருக்கும்,அதுவும் இளம்வயதில் நிச்சயம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். வியாபாரத்தில் தோல்விதான் மிகப்பெரிய சிறந்த விஷயமாக உங்கள் வாழ்வில் மீண்டு வர உதவும் என்று தெரிவித்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த டியூரா டியுப் நிறுவனத்தை 3 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிய அவர், அதனை பெரிதாக பிர்டடனில் காலூன்ற வைக்க திட்டமிட்டதாக தனது அனுபவத்தை கூறியுள்ளார். ஆனால் வேலைக்கு ஆட்களை வைக்காமல் தாங்களாகவே பணிகளை செய்தது, எவ்வளவு பெரிய பிழை எனவும் அது எங்கு சறுக்கியது என்றும் அனில் அகர்வால் விளக்கியுள்ளார். 3 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிய நிறுவனத்தை 7 பில்லியன் பவுண்டுக்கு அவர் விற்றுவிடடார்.லாபம் கிடைத்தாலும் தோல்வி நல்ல பாடத்தை கற்றுத்தந்தது என்றும் அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் எப்படி வணிகம் செய்ய வேண்டும் என்று டியூராடியூப் நிறுவனம் தனக்கு அதிகம் கற்றுத்தந்ததாக சிலாகித்துள்ள
அனில் அகர்வால்,பிரிட்டனில் கிடைத்த பாடம் ஆஸ்திரேலியா மற்றும் ஆர்மினியாவில் வணிகத்தை மேற்கொள்ள உதவியதாகவும் கூறியுள்ளார்.