எச்சரிக்கும் நிபுணர்கள்..
இந்தியாவில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையாமல் அதிகளவிலேயே இருந்து வரும் நிலையில் அதனை குறைப்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு எடுக்க இருக்கிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளின் வட்டி விகிதம் மக்கள் வாங்கும் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறைவான வட்டி விகிதம் இருக்கும்பட்சத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி முடிவை எடுத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் இருந்தே கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 6.2 விழுக்காடாக உள்ளது. காய்கனிகளின் விலை உயர்வால், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் தாங்கிக்கொள்ளும் அளவுக்கான 4 %-ல் இருந்து அதிகளவாக உள்ளது. பணவீக்கம் இத்தனை பெரிதாக இருக்கும்போது ரிஸ்கை ரிசர்வ் வங்கி எடுகக்ககூடாது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச அளவில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தனது நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி மாற்றுக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர்ந்து 10 ஆவது முறையாக ரெபோ வட்டி விகிதத்தை மாற்றாமல் ரிசர்வ் வங்கி 6.5 %ஆகவே தொடர்ந்து வருகிறது.
நிதியமைச்சர் மட்டுமின்றி, மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் இருப்பதால் அது பற்றி தற்போது தம்மால் பேச முடியாது என்றார்.