அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி
அமெரிக்க பெடரல் ரிசர்வ், தங்கள் நாட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்க உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. நேற்று அமெரிக்க பங்குச்சந்தைகளில் 0.35% சரிவு ஏற்பட்டது. S&P 500 துறை பங்குகளில் பிரதான 11 பங்குகளில் 5 பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. சுகாதாரத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு சரிந்துள்ளது.
ஆற்றல் துறையில் 1 விழுக்காடு விலை வீழ்ச்சியும் காண முடிந்தது.பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் கடன் வட்டி விகிதத்தை நூறு அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் பொருளாதாரம் மேலும் மந்தமடையும் என்று அந்நாட்டு வணிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் அமெரிக்க பணவீக்கம் குறித்த புள்ளி விவரம் வெளியானதும் அமெரிக் பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களே தாக்குப்பிடிக்க முடியாத சூழல் உள்ளது, ஆப்பிள், அமேசான்,ஆல்ப்பெட் நிறுவன பங்குகள் 0.3% சரிந்துள்ளது. இதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகளின் விலை 0.6% குறைந்துள்ளது
மிக மோசமாக சரிந்துள்ள அமெரிக்க பங்குச்சந்தைகளின் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையிலும் பிரிதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.