விழுந்து எழுந்த சந்தைகள்
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் செபியின் தலைவரான மதாபி புரிபுச்சுக்கும் அதானி குழுமத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பியிருந்தது. இந்த விவகாரத்தால் பங்குச்சந்தைகள் காலையில் வர்த்தகத்தை தொடங்கியதும் சென்செக்ஸ் 350புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ந்தது. குறிப்பாக அதானி குழுமத்தின் பங்குகள் 7 விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. மதியம் சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள், பின்னர் மாலை நேரத்தில் லேசாக சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57 புள்ளிகள் குறைந்து 79ஆயிரத்து 648 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 20 புள்ளிகள் குறைந்து 24ஆயிரத்து 347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. Hero MotoCorp, Axis Bank, ONGC, Infosys JSW Steel உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. NTPC, Britannia Industries, Adani Ports, SBI, Dr Reddy’s Labs உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன.தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்புத்துறை , உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட்துறை பங்குகள் உயர்வை கண்டன ஊடகம் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அதன்படி, திங்கட்கிழமை ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 470 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து760 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 87 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 87ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்துள்ளது. பட்ஜெட்டுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.