செபிக்கு பிரபல முதலீட்டாளர்கள் கோரிக்கை..
மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனங்களான சோனியும் ஜீ நிறுவனமும் இணையும் கெடு நீண்டுகொண்டே செல்கின்றது.
ஜீ நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளரான எல்ஐசி 23.5விழுக்காடு பங்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனம் செபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் சோனி குழுமம் பங்குதாரர்களை மதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஐசிஐசிஐ புரோடென்ஷியல், அமன்சா ஹோல்டிங்க்ஸ்,நிப்பான் இந்தியா , புளூட்டஸ் குழுமம் ஆகியன சோனி நிறுவன இணைப்பு குறித்து மாற்று வியூகம் வகித்து வருகின்றனர். ஜீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான புனித் கோயன்கா பதவி விலக மறுக்கும்பட்சத்தில் சோனி நிறுவனத்தின் நிர்வாக குழு சேர்ந்து இறுதி முடிவு எடுக்க உள்ளது. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சேர்ந்து கோயன்கோவை நீக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பங்குதாரர்களில் 10 விழுக்காடு அளவுக்கு யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் சிறப்பு பொதுக்கூட்டம் கூட்ட ஏற்பாடு செய்யும் அதிகாரம் கொண்டுள்ளது. கடந்த ஜனவரி 20 ஆம் தேதி ஜீ நிறுவனத்தின் பங்குகள் 7 விழுக்காடு குறைந்து 231 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உண்மையில் டிசம்பர் 21 ஆம் தேதியே இரு நிறுவனங்களும் இணைந்திருக்க வேண்டும், ஆனால் இரு தரப்பினரும் 30 நாட்கள் அவகாசம் கோரியிருந்தனர். 2021 ஆம் ஆண்டு முதல் ஜவ்வு போல இந்த நிறுவனங்கள் இழுத்து வருகின்றன. ஜீ நிறுவனத்தின் புனித் கோயன்கா மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கூட்டு நிறுவனத்தின் தலைமை பதவியை புனித் வகிக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால் பல மாதங்களாக இரு நிறுவனங்களின் இணைப்பு தள்ளிப்போகிறது. ஜீ நிறுவனத்தின் டிஷ் டிவியின் 71 விழுக்காடு பங்குதாரர்கள் சுதந்திரமான இயக்குநர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் டிஷ்டிவிக்கு ஒதுக்கிய 203 கோடி ரூபாய் முதலீடுகளை ரத்து செய்தது பல கேள்விகளை எழுப்பி வருகிறது.