ஐ ஓ எஸ் 18-இல் விஷன் ஓஸ் போன்ற அம்சங்களா?
அமெரிக்காவில் அண்மையில் விஷன் புரோ என்ற டிஜிட்டல் உபகரணத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் புரட்சி கரமான வடிவமைப்பு, தனித்துவமான அம்சங்கள் காரணமாக உலகளவில் இது கவனம் ஈர்த்திருக்கிறது.
இந்த சூழலில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் ஐஓஸ் 18ஆவது இயங்குதளத்தில் பல்வேறு புதுமைகளை புகுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பன அறிவிப்பு wwdc 2024 டெவலப்பர்கள் மாநாட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆப்பிள் செல்போன்கள் மற்றும் ஆப்பிள் சார்ந்த பொருட்களில் பல ஆண்டுகளாக இயங்குதளம் மாறவில்லை என்ற புகார் உள்ளது. இந்த சூழலில் ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் குறிப்பாக விஷன் புரோவில் ஏற்கனவே ஆப்கள் மற்றும் சஃபாரி ஆகிய மென்பொருட்கள் இயங்கி வருகின்றன. அதே பாணியில் புதிய பொருட்களிலும், செல்போன்களிலும் தோற்றத்தை தரும் வகையில் புதிய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் குர்ன்மேன் ஆப்பிளில் புதிய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்த இருப்பதை உறுதி செய்திருக்கிறார். ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் ஐஓஎஸ் 18 மாடல்கள் செயற்கை நுண்ணறிவு காலத்தில் புதிய அத்யாயத்தை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் செயலிகளில் தானாக கலந்துரையாடல் அம்சங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் மியூசிக் செயலியுடன் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை இணைக்கும் வகையில் பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. புதிய செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்த உபகரணங்களை கிரியேட்டர்கள் பெரும் வகையில் புதிய வசதிகளை ஆப்பிள் தயாரித்து வருகிறது. ஏற்கனவே அட்டகாசமாக இருக்கும் ஆப்பிள் இயங்குதள வசதி, செயற்கை நுண்ணறிவு நுட்பமும் இணையும்போது வேற லெவல் செயற்கை நுண்ணறிவு நுட்பம் செயல்படும் என்று டெக் ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.