5 ஆவது முறையா ஒரு மாற்றமும் கெடயாது…

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிகளின் மீது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஒருவர் கடன் பெறுகிறார் என்றால் அவரின் கடன் மீதான வட்டி விகிதம் 5.25-5.50 விழுக்காடாகவே தொடரும் எனஅறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து 5 ஆவது முறையாக மாற்றப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. 3 முறை இந்தாண்டில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கப்போவதாக வெளியான தகவலால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
கடந்த 23 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அதே நிலையில் கடன்கள் மீதான வட்டி அளவு உள்ளது.
அமெரிக்க அரசு பணவீக்கத்தின் விகிதத்தை 2 விழுக்காடாக வைக்கவே இலக்கு நிர்ணயித்து அதனை நோக்கி நகர்ந்து வருகிறது. அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 2.1 விழுக்காடாக இருக்கிறது. இது கடந்த டிசம்பரில் 1.4 விழுக்காடாக இருந்தது. உணவு மற்றும் ஆற்றல் துறையின் பணவீக்கம் 2.6 விழுக்காடாக தொடர்வதால் இந்த முடிவை அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்துள்ளது.
கடந்த 2022 மார்ச் மாதத்தில் இருந்து கணிசமாக உயர்த்தப்பட்ட கடன்கள் மீதான வட்டி விகிதம் 5.25 விழுக்காடாக தற்போது உள்ளது. ஜூலை 2023 க்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.