பங்குகளை அதிகம் விற்கும் வெளிநாட்டினர்..

இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வரும் போக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஃபிப்ரவரி மாதத்துடன் சேர்த்தால் 5 ஆவது மாதமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர். 41 ஆயிரத்து 748 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை அவர்கள் எடுத்துள்ளனர். அமெரிக்க கடன் பத்திரங்கள் நல்ல லாபத்தை தருவதும், உலகளாவிய சிக்கல்களாலும் இந்திய சந்தைகளில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் மட்டும் 11,639 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ஒறே நாளில் விற்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஜனவரியில் 8,132 கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டதே அதிகபட்ச தொகையாக இருந்தது. இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1,23, 652 கோடி ரூபாய் அளவுக்கு இந்தாண்டில் மட்டும் பணத்தை வெளியே எடுத்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 2,688 கோடி ரூபாய் வெளியே செல்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் 20 வேலை நாட்களில் 18 நாட்கள் விற்பனையில்தான் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். அதே நேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்கும் பங்குகளை உள்ளூர் முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கி வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் மட்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 6 % சரிவை கண்டுள்ளன. உள்நாட்டில் நிறுவனங்களின் 3 ஆம் காலாண்டு முடிவுகள் மிகமோசமாக இருந்ததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் நிறுவனங்களின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதாகவும், மக்கள் குறைவான அளவில் பணம் செலவழிப்பதும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது. வெளிநாடுகளில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக இந்த சரிவு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.