31,000கோடி ரூபாய் அவுட்..
பெருந்தொற்றுக்கு பிறகு பெரிய நிதிச்சுமையை சந்த்து வந்த சீனா, தற்போது இந்திய பங்குச்சந்தைகளுக்கு சவால் விடும் வகையில் உருவெடுத்துள்ளது. அண்மையில் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக பெரிய தொகை உதவியாக சீனா அளித்தது. இதையடுத்து முதலீட்டாளர்கள் கவனம் இந்திய சந்தைகளைவிடுத்து, சீனா பக்கம் திரும்பிவிட்டது. கடந்த 3 வேலை நாட்களில் மட்டும் 31,000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச்சந்தைகளில் இருந்த முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். சீனாவின் ஹாங்செங் பங்குச்சந்தைகள் 26% உயர்வை கண்டுள்ளது. ஒரே மாதத்தில் இத்தனை பெரிய மாற்றம் இருப்பதால் முதலீட்டாளர்கள் அந்தப்பக்கம் தாவியுள்ளனர். மேலும் சீனாவின் பங்குச்சந்தையில் இந்தியாவை விட குறைவான மதிப்பிலேயே பங்குகள் இருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இஸ்ரேல்-ஈரன் தாக்குதல் உள்ளிட்ட காரணங்கள் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அச்சமடைய வைத்துள்ளது. சீனாவில் முதலீடுகள் அதிகரித்துக்கொண்டே செல்லும்பட்சத்தில் இந்திய சந்தைகளில் பெரிய பாதிப்பு ஏற்படுவது உறுதியாகிவிடும். அமெரிக்க பங்குச்சந்தைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சீனப்பங்குச்சந்தைகள் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ அத்தனை வேகமாக இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடுகளை சீனாவுக்கு மாற்றும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.