அமெரிக்கா போய் இந்தியா குறித்து ஆலோசனை நடத்தின நிதி அமைச்சர்!!!!
அமெரிக்க கருவூல செயலர் ஜானட் எல்லன் மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அண்மையில் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் வணிகம் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எதிர்வரும் பட்ஜெட்டில் சிறப்பாக செயல்படுவது குறித்து இருதரப்பினரும் கலந்து ஆலோசித்ததாகவும் இந்திய பொருளாதாரம் மேலும் வளரவும் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். சர்வதேச சந்தை நிலவரப்படி ஏற்ற இறக்கத்துடன் உள்ள கச்சா எண்ணெயால் இந்திய பொருளாதாரம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா 85 % கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை , மற்றும் இருநாட்டு அரசாங்களுக்கு இடையே நடத்த வேண்டிய பரிவரத்தனை, ரசர்வ் வங்கிகள் பகிர்ந்துக் கொள்ளும் தரவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றின் நிலை குறித்தும் இருநாட்டு முக்கியஸ்தர்களும் ஆலோசித்தனர் உணவு விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ வாய்ப்புள்ளதாகவும் ஜானட் தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையேயோன பொருளாதார மற்றும் நிதி கூட்டணியை வலுப்படுத்தவும் விவாதிக்கப்பட்டது.