மோபிக்விக் ஐபிஓ அப்டேட்..

மோபிக்விக் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டின் முதல் நாளில், முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பு தெரிவித்தனற். 572 கோடி ரூபாய் நிதி தேவை என்று ஐபிஓ வெளியிடப்பட்டது. 3 நாட்கள் திட்டமிடப்பட்ட நிலையில் முதல் நாளில் தேவையை விட 7.32 மடங்கு அதிகம் வாங்கப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகள் 26.7மடங்கு அதிகம் வாங்கப்பட்டுள்ளது. 8.69கோடி பங்குகள் சந்தையில் வாங்கப்பட்டுள்ள நிலையில், 1.18கோடி பங்குகள்தான் விற்பனைக்கே வந்தது. இன்வெஸ்டார் கெயின் என்ற இணையதள தரவுகளின் படி மோபிக்விக் நிறுவனத்தின் கிரே மார்கெட் பிரீமியம் 136 ரூபாயாக உள்ளது. பட்டியலிடப்பட்ட கட்டணம் 415 ரூபாயாகும். 265ரூபாய் முதல் 279 ரூபாயாக ஈக்விட்டி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முகப்பு விலை ரூ. 2 ஆக உள்ளது. ஒரு லாட்டில் 53 பங்குகள் இருக்கும் வகையில் ஐபிஓ வெளியிடப்பட்டது. வரும் 13 ஆம் தேதி இந்த ஐபிஓவின் கடைசிநாளாகும். 2008-ல் தொடங்கப்பட்ட நிதிநுட்ப நிறுவனம், பிரீபெயிடு டிஜிட்டல் வாலட் மற்றும் ஆன்லைன் பேமண்ட் சேவைகளை வழங்கி வந்தது. இந்தியா முழுக்க 16 கோடி வாடிக்கையாளர்கள் மோபிக்விக்கில் பதிவு செய்துள்ளனர். இதில் 4.26 கோடி பேர் வணிகர்களாவர். இந்த நிறுவனத்தின் வருவாய் 890 கோடி ரூபாயாக உள்ளது. லாபம் மட்டும் 14 கோடி ரூபாய். மிஷின் லர்னிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நுட்பங்களையும் அந்த நிறுவனம் உள்ளே இறக்க இருக்கிறது. நாளையுடன் இந்த ஐபிஓ முடிவுக்கு வருகிறது.