விரைவில் விமான கட்டணம் அதிகரிக்கும்??!!
விமான சேவைக்கான கட்டணம் குறித்த புதிய அறிவிப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதன்படி, உள்நாட்டு விமான சேவைக்கான கட்டண நிர்ணய வரம்பு வரும் 31-ம் தேதியுடன் ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் விமான சேவையின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய உள்நாட்டு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கட்டண வரம்பு ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து இதே போல் தான் இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், உள்நாட்டில் சாதகமான சூழல் ஏற்பட்ட பின்னர் உள்நாட்டு விமான சேவைக்கான கட்டண வரம்பை, மத்திய அரசு மறுமதிப்பீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கட்டண வரம்பு ரத்து செய்யப்பட்டால் விமான சேவைக்கான கட்டணம் உயரும் அபாயம் உள்ளதாக கருத்து முன் வைக்கப்படுகிறது.