ரூட்டை மாத்தும் ஐடிசி..
பிரபல நிறுவனமான ஐடிசி தனது புதிய உணவுப்பொருட்களுக்கான அனுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாப்பிடும் வகையிலான உணவுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உப்மா, ஓட்ஸ், குக்கீஸ் மற்றும் ஆட்டாவை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதால் ஒரு கோடி வீடுகளுக்கு தங்கள் பொருட்களை அனுப்ப முடியும் என்று ஐடிசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் 45 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் அவர்களுக்கு தேவையான வகையில் உணவுப்பொருட்கள் மாற்றி அளிக்கவும் அதன் செயல் இயக்குநர் ஹேமந்த் மாலிக் கூறியுள்ளார். இந்தியாவில் 45 வயதை கடந்தோரின் எண்ணிக்கை 40 விழுக்காடாக உள்ளது. உடல்நலத்தை தரும் வகையில் இயற்கையான பொருட்களை இந்த புதிய உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சாதாரண ரக பொருட்களை விட தரமான பொருளாக தந்தால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.. வயதானாலும் 45 வயதுக்கு மேலும் நன்றாக சம்பாதிக்கும் திறமை உள்ளவர்களால் தங்கள் நிறுவன பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 45 வயதுக்கு மேற்பட்டோரை இலக்காக வைத்து பல முன்னணி தயாரிப்புகளை அளிக்கவும் ஐடிசி திட்டமிட்டுள்ளது.