தரத்தில் கவனம் செலுத்துங்க.. பணத்தில் இல்ல…
சியாம் எனப்படும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வாகன உற்பத்தியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என்றும், பணத்தை கருத்தில் கொள்ளாமல் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இறக்குமதியை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு அதிக சௌகர்யத்தை தரும் வகையில் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அதனை அதிகம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாகனங்களை வாங்கும்போது அதன் விலையில் ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
பழைய வாகனங்களை அழித்துவிட்டு புதிய வாகனங்களை வாங்கமுன்வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனையாளர்கள் சலுகைகள் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
புதிய வாகன கொள்கையை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், பழைய வாகனங்களை அழிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு தர சான்று அவசியம் என்றும் பேசினார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் சாலைவிபத்தில் உயிரிழந்த நிலையில் இந்தியாவில் கார்களில் பாதுகாப்பு அம்சம் குறித்த விவாதங்கள் வலுத்து வருகின்றன. அரசு தரப்பிலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.