31 ஆம் தேதிக்குள் இதையெல்லாம் முடிங்க..
வரியை சேமிப்பதற்கான கடைசி நாள் வரும் 31 ஆம் தேதியாகும். அதற்கு இன்னும் வெகு சில நாட்களே இருக்கின்றன. 29 ஆம் தேதியும் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை வேறு வருகிறது.
30 ஆம் தேதி வங்கிகள் திறந்திருக்கும் ஆனால் பங்குச்சந்தைகள் 28 ஆம் தேதியுடன் முடிந்துவிடுகிறது. வரியை மிச்சம் பிடிக்கும் முதலீடுகளை சரி செய்ய வரும் 28 ஆம் தேதிக்குள் முதலீடுகளை செய்வது உசிதம். 31 ஆம் தேதி உங்கள் கணக்குகளில் வரி சேமிக்கும் பணிகள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ELSS திட்டத்தில் சேமிப்போரும் வரும் 31 ஆம் தேதிக்குள் வரும் வகையில் சேமித்துக் கொள்வது நல்லது. நீங்கள் காசோலை வடிவில் முதலீடுகள் செய்வதாக இருந்தால் வரும் 28 ஆம் தேதிக்குள் முடித்துவிடும்படியும் அறிவுறுத்தப்படுகிறது. சிறுசேமிப்புகளில் பணம் போடுவதற்கும் 31 ஆம் தேதிக்கு முன்பே பணம் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கும் வகையில் திட்டமிட வேண்டும். பரஸேபர நிதிக்கும் இதே நிலைதான் என்கிறார்கள் நிபுணர்கள். அறிவுறுத்துகின்றனர். பலரும் தாங்கள் வைத்திருக்கும் பரஸ்பர நிதியை ஈஎல்எஸ் எஸ் ஆக மாற்ற முயற்சிகள் செய்து வருகின்றனர். அவ்வாறு செய்ய வேண்டுமெனில் வரும் 26 ஆம் தேதி உங்கள் கணக்குகளில் இருப்பதைப்போல பார்த்துக்கொள்ளவும், அதாவது பரஸ்பர நிதி பங்குகள் 26 ஆம் தேதி விற்கப்பட்டால் அதை வாங்கி நமது கணக்கில் வர மார்ச் 28 வரை கூட ஆகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே விரைந்து சேமிப்புகளை வங்க்கணக்குகளாக மாற்றிக் கொள்வது சிறந்ததாம்.