காஷ்மீரில் வெளிநாட்டு முதலீடுகள்..
இந்தியாவின்சர்ச்சைக்கு உரிய பகுதியாகவே நீடிக்கும் ஜம்மு காஷ்மீரில் வெளிநபர்கள் இடங்களை வாங்க முடியாது என்ற சிறப்பு சட்டம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வளர்ச்சியை காரணம் காட்டி பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில் குல் புரூட்வால் என்ற விவசாய நிறுவனம் 60 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. அந்த யூனியன் பிரதேசத்தின் முதல் வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனமாக குல் நிறுவனம் இருக்கிறது. விவசாயத்துறையில் முதலீடுகள் அதிகரித்து உள்ளதால் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் உற்பத்தியில் இந்தியாவின் 92 விழுக்காடு பங்களிப்பை ஜம்மு காஷ்மீரும் இமாச்சல பிரதேசமும் செய்கின்றன. இப்போது வரை 8 முதல் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு வணிகம் நடக்கின்றன. குல் நிறுவனம் ஆப்பிள் விவசாயிகள் ஐந்தாயிரம் பேருக்கு உயர்தர உபகரணங்கள் அளித்து உதவியுள்ளது. 1 ஹெக்டரில் 12 மெட்ரிக் டன் அளவுக்கு ஆப்பிள் விளைவிக்க வைப்பதே இலக்கு என்றும் குல் நிறுவனம் தெரிவிக்கிறது. incofin என்ற வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்திருக்கும் நிலையில் விவசாயத்துறையில் தொழில் நுட்ப நிறுவனமாக தங்கள் நிறுவனம் இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக குல் நிறுவனத்துக்கு இன்கோபின் நிறுவனம் ஐம்பது கோடி ரூபாய் அனுப்பியுள்ளது. இந்த முதலீடு மூலம் காஷ்மீரில் உற்பத்தியாகும் இந்திய ஆப்பிள்கள் உலகளவில் வணிகம் செய்யப்படும் என்றும் முதலீடுகள் குறித்து இரு நிறுவனங்களும் கருத்து தெரிவிக்கின்றன