2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அந்நிய பண கையிருப்பு
இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மிக அதிகபட்சமாக குறைந்திருந்தது. அதன் பிறகு ஒரு அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 7வது வாரமாக இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு சரிந்து வருகிறது. செப்டம்ர் 16ம் தேதி வரை நாட்டின் மொத்த வெளிநாட்டு பண கையிருப்பின் அளவு 545 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த வாரம், அதாவது செப்டம்பர் 9ம் தேதி வரை 550 பில்லியன் டாலராக இருந்தது.
மொத்த டாலர்கள் மதிப்பு 484 பில்லியன் டாலராகவும், தங்கத்தின் கையிருப்பு 38 பில்லியனாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவுக்கு மட்டும் 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில்,முதலீட்டாளர்களுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு நேரிட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.