ஜி பே வேல செய்யாதா..எங்க தெரியுமா?
டெக் உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தில் பல்வேறு சேவைகள் இருந்தாலும் ஜிபே சேவை கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ஆல்ஃபபெட் நிறுவனம் திகழ்கிறது. ஆல்ஃபபெட் நிறுவனம் அமெரிக்காவில் ஜி பே சேவையை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜிபே சேவைக்கு பதிலாக அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களை கூகுள் வாலட் என்ற சேவைக்கு மாற்றுவதாக ஆல்ஃபபெட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில் ஜிபே வேலை செய்யாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜிபேவுக்கு பதிலாக மக்கள் கூகுள் வாலட் சேவையைத்தான் 5 மடங்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிபே சேவை அமெரிக்காவில் மட்டுமே ரத்து செய்யப்படும் நிலையில் மற்ற நாடுகளில் வழக்கம்போல இயங்கும் என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எந்த பிரச்னையும் இல்லாமல் ஜி பே வேலை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ளவர்கள் தங்கள் ஜி பேவுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் உள்ள தொகையை ஜி பே வெப்சைட் மூலம் மாற்றிக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. கூகுள் வாலட் என்ற சேவையை அமெரிக்காவில் வசிப்பவர்கள் பயன்படுத்தவும் ஆல்ஃபபெட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.