கவுதம் அதானியின் அதீத நம்பிக்கை..
சோலார் திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்காவில் கவுதம் அதானியின் நிறுவனம் மீது புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கவுதம் அதானி பங்கேற்று பேசினார். அதில் தங்கள் நிறுவனம் மீது பழி சுமத்துவது முதல் முறை இல்லை எனஅறும் அதானி குழுமத்தில் இருந்து யாரும் சர்ச்சையில் தற்போது சிக்கவில்லை என்றும் மறுத்தார். பின்னர்பேசிய அவர், ஒவ்வொரு முறை தாக்கப்படும்போதும், தங்கள் நிறுவனம் இன்னும் வலுவாகி வருவதாகவும், ஒவ்வொரு தடைக்கற்களையும் படிகட்டுகளாக பார்ப்பதாகவும் கூறினார். ஏராளமான பொய் செய்திகள் தங்கள் நிறுவனம் மீது வந்திருப்பதாகவும், உண்மையை விட பொய்தான் தற்போது வேகமாக பரவி வருவதாகவும் கவுதம் அதானி கூறினார். சட்டப்போராட்டம் நடத்தி வருவதாக கூறியுள்ள அவர், உலகத்தரத்திலான அனைத்து விதிகளையும் தங்கள் நிறுவனம் பின்பற்றி வருவதாகவும் கூறினார். கடந்தாண்டு ஜனவரியில் FPO வெளியிட தயாராக இருந்தபோது அமெரிக்க நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு அதானி குழுமத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார். நிதி நிலைத்தன்மை மற்றும் அரசியல் குழப்பம் என இரண்டு முனை தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பெற்ற போதும் அதனை திருப்பித்தந்துவிட்டதாகவும் கவுதம் அதானி கூறியுள்ளார். 1978-ல் 16 வயதில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்ற தாம், தொழிலதிபராக விரும்பியதாக கூறினார்.மும்பையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவும், தமக்கு வைரக்கடையில் வேலை கிடைத்ததும் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் நகை வாங்கியதால் தமக்கு 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் கிடைத்ததாக கூறினார். வைர வியாபாரத்தில் இந்தியா மகுடமாக திகழ்ந்த நிலையில் , தற்போது அது சரிந்திருப்பது குறித்தும் கவலை தெரிவித்தார்.