பணத்த குடுங்க!!! அப்புறம் பார்க்கலாம்….
சமுக வலைதள நிறுவனங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றை பொதுமக்கள்
இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். மற்றும் ஓடிடி பிளாட்ஃபார்ம்களான நெட்பிளிக்ஸ்
பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றுக்கு சந்தா செலுத்தி மக்கள் பார்க்கின்றனர்.
ஆனால் இந்த நிறுவனங்கள் தற்போது வரை தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பெரிய அளவு பணமும் அளிப்பதில்லை.
இதனால் நெட்வொர்க் வசதி அளித்து வரும் நிறுவனங்கள் நிதி இழப்பை சந்தித்து வருகின்றன
இதனை கருத்தில் கொண்டு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய் மற்றும் மத்திய தகவல்
தொடர்புத்துறையும் இணைந்து புதிய திட்டங்களை கொண்டு வருகிறது.
இதன்படி ஓடிடி நிறுவனங்களும், சமூக வலைதள நிறுவனங்களும் சிம்கார்ட் நிறுவனங்களுக்கு அக்சஸ் சார்ஜ்
எனப்படும் அனுகு கட்டணம் செலுத்த வேண்டும், தற்போதே ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில்
வீடியோ நுகர்வு 70 விழுக்காடாக உள்ளது. 5ஜி அலைக்கற்றை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்த அளவு
இன்னும் அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோவை அதிகம் பார்க்க சிம்கார்ட் நிறுவனங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பணம் அளிக்க வேண்டும்.
தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இடையே உள்ள இன்டர் கனெக்ட் சார்ஜ் பகிர்ந்துகொள்வதைப்போல
ஓடிடி நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களும் சிம்கார்டு நிறுவனங்களுக்கு கணிசமான தொகையை அளிக்க உள்ளன.