வருமானவரி போர்டலில் குளறுபடியா?
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள போர்டலில் சில பயனாளிகளுக்கு தொகை தவறாக காட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வருமான வரி தாக்கல் செய்யும் சிலருக்கு 450 ரூபாய்க்கு பதிலாக 45 ஆயிரம் ரூபாயாக பதிவாகி வருகிறதாம். இதுபோன்ற பிரச்னைகள் வந்தால் அடுத்து என்ன செய்யவேண்டுமெனில் திருத்தப்பட்ட சேவைகளை செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சில பயனாளிகளுக்கு 4 லட்சத்துக்கு பதிலாக 17 கோடி ரூபாய் என்று தவறான தொகை பதிவேறுவதால் பயனர்கள் குழப்பமடைந்திருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த சிலர் 1.2 கோடி ரூபாய் என்று வருமான வரிக் கணக்கில் தாக்கல் செய்தால் இணையத்தில் 12 கோடி என்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொழில்நுட்பக் கோளாறு என்று கூறும் சிலர் , கணினிகளில் கமா,புள்ளி மாறியிருக்கும் என்றும் கூறுகின்றனர். அப்படி எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் புதிய அப்டேட் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்திருக்கிறது. பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவிடும் வசதி செய்து தரப்படவேண்டும் என்பதே சில ஆடிட்டர்களின் கோரிக்கையாக இருக்கிறது. நாட்டின் மிகமுக்கிய வரி ஆதாரமாக இருக்கும் வருமான வரி போர்ட்டலில் இத்தகைய சிக்கல் விரைந்து தீர்க்கப்படவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.